இறுகப்பற்று படக்குழுவை பாராட்டிய நடிகர் கார்த்தி... நன்றி தெரிவித்த நடிகை...
அண்மையில் திரையரங்குகளில் வெளியான இறுகப்பற்று படத்தை, நடிகர் கார்த்தி பாராட்டி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களஇல் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
#Irugapatru - reminds us that it takes a lot of preparation to be a husband/wife. Understanding, love and more importantly mutual respect is what is required to keep relationships going. Kudos to the team behind a beautiful film with great performances that mirrors today’s… pic.twitter.com/DXi3XTXeMQ
— Karthi (@Karthi_Offl) October 9, 2023
இத்திரைப்படம் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இறுகப்பற்று படம் பார்த்த நடிகர் கார்த்தி படக்குழுவினரை பாராட்டி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை ரீட்வீட் செய்து படத்தின் காநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நன்றி தெரிவித்துள்ளார்.