நானி படத்தில் கேமியோ ரோலில் நடிகர் கார்த்தி..?

karthi

நானி நடித்து வரும் ஹிட் 3 படத்தில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது ஹிட் 3 படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. karthi

இந்நிலையில், ஹிட் 3 படத்தில் நானியுடன்  நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ஹிட் 4' படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இதனால் அதற்கான லீடுக்காக அவர் ஹிட் 3 படத்தில் கேமியோ  ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகறான கார்த்தி நடிப்பில் 'சர்தார் 2' திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 
 

Share this story