கெளதம் வாசுதேவ் மேனன் உடன் கூட்டணி சேரும் நடிகர் கார்த்தி...!

gvm

நடிகர் கார்த்தியும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

மாதவன் நடித்த மின்னலே, சூர்யாவின் காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம், சிம்புவின் விண்ணைத் தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு மற்றும் அச்சம் என்பது மடமையடா, ஜீவாவின் நீதானே என் பொன் வசந்தம், அஜித்தின் என்னை அறிந்தால், கமலின் வேட்டையாடு விளையாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.gvm

சமீபத்தில் மம்மூட்டியை வைத்து டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற மலையாள படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில்,  கெளதம் வாசுதேவ் மேனன் கார்த்தியிடம் கதை ஒன்றை கூறியதாகவும், அந்த கதை பிடித்துப் போனதால், அக்கதையில் நடிப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கதை விரிவாகத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் ஈடுபட்டுள்ளார். 

Share this story