நடிகர் கருணாஸ் மகள் திருமணத்தின் கிளிக்ஸ் – ஆனந்தக் கண்ணீர் விட்ட கிரேஸ் கருணாஸ்.

photo

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் கருணாஸ், இவரது மனைவி கிரேஸ் கருணாஸ் பிரபல பாடகி ஆவார். இந்த தம்பதியின் மகளான டயானா கருணாஸ்ஸிற்கு சமீபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

photo

photo

நந்தா, திருடா திருடி, பிதாமகன், வில்லன், அட்டகாசம், பொல்லாதவன், புது கோட்டையிலிருந்து சரவணன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக கலக்கிய   கருணாஸ், திண்டுகல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை எற்படுத்தியது.

photo

photo

இந்த தம்பதியின் மகன், கென் கருனாஸ் தனுஷின் அசுரன் திரைப்படத்தின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு சர்ச்சில் பிரம்மாண்டமான முறையில் தனது மகளின் திருமணத்தை நடிகர் கருணாஸ் நடத்தினார். அபோது எடுத்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது, புகைப்படத்தின் அனைவரும் மிக அழகாக உள்ளனர். 

photo
 

Share this story