காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின்... குவியும் வாழ்த்துக்கள் !

kavin

தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை இன்று நடிகர் கவின் கரம்பிடித்தார். 

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக இருப்பவர் நடிகர் கவின். சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிர்களிடையே பிரபலமானவர். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டார். 

kavin

கடந்த 2017-ஆம் ஆண்டு ‘சத்ரியன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இதையடுத்து ‘லிப்ட்’ படம் ஓரளவிற்கு நல்ல பெயரை கொடுத்த நிலையில்  ‘டாடா’ திரைப்படம் ஓவர்நைட்டில் அவரை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இதற்கிடையே மோனிகா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இதையடுத்து கவின் - மோனிகா திருமணம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் கவின் - மோனிகா திரைப்படம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

 

Share this story