கவினுக்கு ஜோடியாகும் 'அயோத்தி' நாயகி... எப்போதும் தொடங்குகிறது ஷூட்டிங் ?

kavin

கவின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

இளம் நடிகராக இருக்கும் கவின், ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் நடிகராக வலம் வருகிறார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான 'டாடா' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. 2k கிட்ஸ்களை கவர்ந்த இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை குவித்தது. 

 kavin

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பட வாய்ப்புகள் கவினுக்கு குவிந்து வருகிறது. அந்த வகையில் கவினின் அடுத்த படத்தின் அப்டேட் கடந்த மாதம் வெளியானது. பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

kavin

இந்நிலையில் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கவுள்ளார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'அயோத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அந்த படத்தில் நடிகை ப்ரீத்தியின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் இறுதியில் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story