‘டாடா’ பட வெற்றியால் டாப் கியரில் செல்லும் கவின்.... அடுத்த படம் குறித்து முக்கிய அப்டேட் !

kavin

‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின்.  ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், அடுத்து ‘லிப்ட்’  படத்தில் நடித்தார். பின்னர் ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடரிலும், நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஊர்குருவி’ படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வெளியாக காத்திருக்கின்றன. 

kavin

 சமீபத்தில் அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நடித்த ‘டாடா’ படம் வெளியானது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இவர்களுடன் ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு ஆண் எப்படி தனியாக தன் மகனை வளர்க்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இதில் கவினின் சிறந்த நடிப்பும், நல்ல திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

‘டாடா’ படத்தின் வெற்றி கவினை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்கவுள்ளார். இதில் முக்கிய தகவலாக ராக் ஸ்டார் அனிரூத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.  

Share this story