'கலகலப்பு' பட பிரபல நடிகர் கோதண்டராமன் காலமானார்

actor

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் கோதண்டராமன். 25 ஆண்டுகாலம் அவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். கலகலப்பு படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். actor

இந்த நிலையில் அவர் நேற்று(18.12.2024) இரவு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 65. இவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோதண்டராமனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. 

Share this story