நடிகர் ‘லொள்ளு சபா’ ஆண்டனி காலமானார் - திரையுலகினர் இரங்கல்...!

antony

லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற ஆண்டனி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நகைச்சுவை நிகழ்ச்சியில் சந்தானத்துடன் பல எபிசோடுகளில் ஒன்றாக நடித்தவர் ஆண்டனி. வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர் ‘தம்பிக் கோட்டை’ உள்ளிட்ட சில படங்களில் சந்தானத்தின் நண்பராக காமெடி கதாபாத்திரங்களில் நடித்தார்.

சினிமாவில் வாய்ப்புகளுக்காக போராடி வந்தவர் உடல் நிலை கடந்த சில மாதங்களாக கடினமாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு உடம்புல தொற்று ஏற்பட்டிருக்கு. அதுனால உடம்புல திரவம் (fluid) உருவாகிடுச்சு. முதல்ல தொடை பகுதியில வீக்கம் தெரிஞ்சதும் உடனடியாக போய் மருத்துவரைப் பார்த்தேன். 'திரவம் உருவாகியிருக்கு அதை எடுத்தாகணும்'னு மருத்துவர் சொன்னார். நான் அப்படியே விட்டுட்டேன். அதுக்கப்புறம் எனக்கு சிறுநீர்ப்பை வீங்கிடுச்சு. அதன் பிறகு மருத்துவர் பேச்சைக் கேட்டு சிகிச்சைக்கு வந்தேன்.antony

நடிகர் சேஷு, சந்தானம் உள்ளிட்ட சிலர் எனக்கு உதவி பண்ணாங்க” என்று பேசியிருந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இன்று காலை சிகிச்சை பலனின்றி ஆண்டனி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story