'பெருசு' படக்குழுவிற்கு நடிகர் மஹத் ராகவேந்திரா வாழ்த்து..!

magath

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள 'பெருசு' படக்குழுவிற்கு  நடிகர் மஹத் ராகவேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மங்காத்தா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் மஹத் ராகவேந்திரா . அதைத் தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்பொழுது மஹத் அடுத்ததாக ‘காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் பெருசு. இதில், வைபவ், அவரது சகோதரர் சுனில், சாந்தினி, நிஹாரிகா, பாலா சரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு   'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படம் வெற்றி பெற நடிகர் மஹத் ராகவேந்திரா  வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் மஹத் மற்றும் வைபவ் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story