நடிகர் மம்முட்டியை கௌரவித்த ஆஸ்திரேலிய அரசு

நடிகர் மம்முட்டியை கௌரவித்த ஆஸ்திரேலிய அரசு

மலையாள திரையுலகின் பெரும்  ஆளுமையாக இருப்பவர் நடிகர் மம்முட்டி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். அதிக தேசிய விருது வென்ற நடிகராகவும் அவர் விளங்குகிறார். 

அண்மையில் அவர் நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்' என்ற திரைப்படம் 80 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. மம்முட்டியின் கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவரது சிறப்பு தபால் தலை, ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று மம்முட்டியின் உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டனர். அதனை இந்தியாவின் தலைமை ஆணையர் மன்பிரீத் வோரா பெற்றுக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் "மம்முட்டி இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடாக திகழ்கிறார். அவரது கலை சேவையை பாராட்டுகிறோம்'', என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை மம்முட்டி ரசிகர்களும், மலையாளிகளும் கொண்டாடி வருகின்றனர்.
 

Share this story