மீண்டும் இயக்குநர் ஆகும் நடிகர் மணிகண்டன்...

mani

தொடர் வெற்றி படங்களை தொடர்ந்து நடிகர் மணிகண்டன், மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  


தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு வசனம், திரைக்கதை, இணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தவர் மணிகண்டன். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்டார். பின்பு பல்வேறு படங்களில் நாயகனாக நடிக்கவே அதுவும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.mani

‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானர் மணிகண்டன். தற்போது மீண்டும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார். இப்படத்தை புஷ்கர் - காயத்ரி தயாரிக்கவுள்ளனர். இதனை சமீபத்திய விழாவொன்றில் தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தில் மணிகண்டனே நடித்து, இயக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டு ‘நரை எழுதும் சுயசரிதை’ என்ற படத்தை இயக்கி இருந்தார் மணிகண்டன். இப்படம் சில விருதுகளையும் வென்றுள்ளது. தற்போது புதிய படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Share this story

News Hub