காற்றில் கலந்தது நடிகர் மனோபாலா உடல்... கண்ணீருடன் வழியனுப்பி வைத்த திரைப்பிரபலங்கள் !

manobala

நடிகர் மனோபாலாவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.‌

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், காமெடி நடிகராகவும் இருந்தவர் நடிகர் மனோபாலா. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.‌‌ நேற்று முன்தினம் அவரின் உடல் நிலை மோசமடையே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை காலமானார்.‌

manobala

இதையடுத்து மனோபாலாவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்கா வைக்கப்பட்டது. அவரது‌ உடலுக்கு நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, ஆர்யா, சூரி, சரத்குமார், சசிகுமார், கவுண்டமணி, யோகிபாபு, ராதிகா,  இயக்குனர்கள் பாரதிராஜா,  பாக்யராஜ், மணிரத்னம், ஷங்கர், லோகேஷ் கனகராஜ், கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

manobala

இந்நிலையில் அவரது உடல் ஊர்வலமாக வளசரவாக்கம் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. மனோபாலாவின் இந்த இறுதி நிகழ்வில் சினிமா பிரபலங்களும், ஏராளமான ரசிகர்களும் கலந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். 

Share this story