மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்.. கண் கலங்க வைக்கும் வீடியோ !

manobala

மறைந்த நடிகர் மனோபாலாவின் கடைசி நிமிட வீடியோவை அவரது மகன் வெளியிட்டுள்ளார். 

 தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் மனோபாலா. ஆரம்பக்காலத்தில் இயக்குனராக அறிமுகமானாலும், பின்னர் காமெடி நடிகராக மாறி ரசிகர்களை மகிழ்வித்தார். 24 திரைப்படங்களை இயக்கிய அவர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

 manobala

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். அதன்பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு கடந்த மாதம் கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

manobala

இந்நிலையில் மனோபாலா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். அந்த சேனலில் மனோபாலா உடல் நலம் குன்றியிருந்த போது எடுக்கப்பட்ட கடைசி நிமிடங்களின் வீடியோ ஒன்றை அவரது மகன் ஹரிஷ் வெளியிட்டுள்ளார். அதில் பலரை சிரிக்க வைத்த மனோபாலா நினைவிழந்த நிலையில் இருக்க அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் முயற்சிக்கின்றனர். அதன்பிறகு மனோபாலாவின் மகன் ஹரிஷ் பாடல் ஒன்றை பாடி அவரின் உற்சாகப்படுத்துகிறார். கண் கலங்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Share this story