மனோபாலாவின் மறைவு வேதனையளிக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

manobala

நடிகர் மனோபாலாவின் மறைவு வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் மனோபாலா. ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் பன்முக திறமை கொண்டு செயல்பட்டு வந்தார். இயக்குனராக அறிமுகமான மனோபாலா, தயாரிப்பாளராகவும் சிறந்த காமெடி நடிகராகவும் இருந்து வந்தார். சுமார் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

manobala

கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோபாலாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.  

மனோபாலாவின் மறைவுக்கு திரை உலகை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 


 

Share this story