நடிகர் மனோபாலா மறைவு... ரஜினி, கமல் இரங்கல்

manobala

நடிகர் மனோபாலா மறைவையொட்டி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்டவராக இருந்தவர் மனோபாலா. நடிகராகவும், இயக்குனராகவும் இருந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள விட்டார் பதிவில் பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார். 

 


இதேபோன்று நடிகர் கமல்ஹாசன் தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


 

Share this story