‘தளபதி 67’ படத்திற்காக வெறித்தனமான ஒர்க்கவுட்... மாஸ் காட்டும் பிரபல நடிகர் !

mansooralikhan

பிரபல நடிகரான மன்சூர் அலிகான் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்து. 

தமிழ் சினிமாவில் 90-களில் கொடூரமான வில்லனாக மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜய்காந்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் மோசமான வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் மன்சூர் அலிகானை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

mansooralikhan

இதையடுத்து படவாய்ப்பு குறைந்ததை அடுத்து தற்போது குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். முன்புபோல் மன்சூர் அலிகானின் நடிப்பிற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

mansooralikhan

இதற்கிடையே தளபதி 67-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘தளபதி 67’ படத்திற்கான பயிற்சியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 


 

Share this story