சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்ட ‘மாரிமுத்து’வின் உடல்.

photo

 மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் இறுதிசடங்குகள் செய்வதற்காக அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

photo

தேனி மாவட்டம் வருசநாடு ஊராட்சி பசுமலை கிராமத்தில் பிறந்த மாரிமுத்து சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி தனது திரை வாழ்வை துவங்கினார். பின்னர் ராஜ்கிரண் இயக்கி நடித்த ‘அரண்மனைகிளி’,’ எல்லாமே என் ராசாதான்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ ஆகிய படங்களை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அசத்தினார். வாலி, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்திய மாரிமுத்திவை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ தான். அந்த தொடரில் அவர் பேசும் ‘இந்தாம்மா ஏய்…’ என்ற வசனம் மிகப்பிரபலம்.

photo

இன்று காலை டப்பிங் பணியில் இருந்த போது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் மாரடைப்பால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் வளசரவாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சின்னத்திரை, வெள்ளித்திரை, ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடல் இறுசடங்குகளை மேற்கொள்ள சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. நாளை காலை 10 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story