தாங்க முடியாத வலியை தந்த மயில்சாமி.. திரைப்பிரபலங்கள் இரங்கல் !

mayilsamy

நடிகர் மயில்சாமி மறைவுக்கு திரையுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பன்முக திறமை கொண்டு செயல்பட்டு வந்த நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். 57 வயதாகும் அவரது மறைவு திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரையுலகினர் கண்ணீரோடு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

நடிகர் கமலஹாசன்

இதுதவிர சமூக வலைத்தளங்கள் வாயிலாக பல முன்னணி நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமல் விடுத்த இரங்கல் குறிப்பில், நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி. 


மலையாள நடிகர் மம்மூட்டி

இது குறித் அவர் வெளியிட்டுள்ள இரங்கலில், மயில்சாமி மறைவால் இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன். அவரது இழப்பு ஒட்டுமொத்த சினிமாவிற்கே ஏற்பட்டுள்ள இழப்பு என்று கூறியுள்ளார். 


நடிகர் தனுஷ்

சிறந்த நடிகரை இழந்தவிட்டோம். இந்த செய்தி என்னுடைய இதயத்தை நொறுக்கியது. 


நடிகர் ஜெயம் ரவி

உங்கள் திடீர் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ஜெயம்’ படத்தில் உங்களுடன் நடித்ததை என்னால் மறக்கமுடியாது. 


நடிகர் சசிகுமார் 

மயில்சாமியின் மறைவு நம்ப முடியாத அளவில் உள்ளது. நல்ல மனிதர், மனிதநேயம் மிக்கவர், என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 


 

 

 

 

Share this story