முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சில்வர் ஜூப்ளி நாயகன் !
1715344665244
வெள்ளி விழா நாயகன், நடிகர் மோகன் இன்று, தனது பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அன்னை அன்பாலயா டிரஸ்ட், பெண்கள் முதியோர் காப்பகத்தில் உள்ள மக்களுக்கு நீர்மோர் மற்றும் மதியம் உணவு வழங்கினார்.
வெள்ளித்திரையில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் மோகன். மைக் மோகன் என்று பெயருடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஏராளமான காதல் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தன. பிசியாக நடித்த வந்த இவர், வாய்ப்பு குறைந்ததால் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். அண்மையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஹரா’ என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.