ரஜினியுடன் மீண்டும் இணையும் மோகன்லால்.. ஜெயிலரை தொடர்ந்து அந்த படத்தலையுமா ?

rajini with mohanlal

'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து ரஜினியுடன் மீண்டும் நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் :ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விரைவில் முடிக்கும் ரஜினி, அடுத்து மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால்சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். 

rajini with mohanlal

இந்நிலையில் இந்த படத்திலும் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து மோகன்லால் நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் அது என்ன மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் காரைக்குடியில் தொடங்கவுள்ளது. 

rajini with mohanlal

இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படம் கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டது. 

Share this story