நடிகர் மோகன்லால் பிறந்தநாள்...சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'கண்ணப்பா' படக்குழு...

mohanlal

நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கண்ணப்பா படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.


மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாகவே கருதப்படும் மோகன்லால் தன் 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். திரைத்துறையில் 45 ஆண்டுகளாக இருப்பவர் இதுவரை 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில், மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான், துடரும் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றன.


இந்த நிலையில், மோகன்லாலின் பிறந்த நாளை முன்னிட்டு கண்ணப்பா படக்குழு புதிய போஸ்டர் மற்றும் விடியோவை வெளியிட்டுள்ளது.
முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், பிரபு தேவா, அக்ஷய் குமார், மோகன் பாபு, சரத் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிவ பக்தர் கண்ணப்பாவை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

Share this story