நடிகர் மயில்சாமி மறைவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் !

mayilsamy

நடிகர் மயில்சாமி மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் மயில்சாமி. மிகவும் ஆக்டிவான இருந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே சோசத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலுக்காக வைக்கப்பட்டுள்ளது. மயில்சாமியின் உடலுக்கு ஏராளமான திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

mayilsamy

அதேபோன்று பல அரசியல் தலைவர்கள் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர். தன்னுடைய ஒலி நாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர் மயில்சாமி. ‘காமெடி டைம்‘ நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு மக்களின் இல்லங்களில் ஒருவராக பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பை பெற்றவர். 

mayilsamy

கலைஞரின் அன்பை பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துக்களை ஆழமாக பதிவு செய்தவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த அவரை இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார். 

Share this story