மேஸ்ட்ரோவை சந்தித்தபோது ஏற்பட்ட ஆனந்தம்.. நாகசைதன்யா நெகிழ்ச்சி !

naga chaitanya

 இசைஞானி இளையராஜாவை நடிகர் நாகசைதன்யா சந்தித்த புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 

முன்னணி நாகர்ஜூனாவின் மகனாக நாகசைதன்யா, தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருகிறார். அவர் தற்போது முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

naga chaitanya

இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. 

naga chaitanya

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் நாகசைதன்யா சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மேஸ்ட்ரோ இளையராஜா சாரை சந்தித்தபோது என் முகத்தில் மிகப்பெரிய ஆனந்தம் ஏற்பட்டது. அவரது இசை திரையுலகில் நீண்ட தூரத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அவரது இசையை மனதில் வைத்து அதிகம் முறை நடித்துள்ளேன். அந்த வகையில் தற்போது ‘கஸ்டடி’ படத்திற்கு இசையமைத்துள்ளார். இது என்னை ஆசீர்வதிக்கும் விதமாக உள்ளது என்று கூறியுள்ளார். 

 

 


 

Share this story