சமந்தாவை பிரிந்தது குறித்து மனம் திறந்த நடிகர் நாக சைதன்யா...!

சமந்தாவை பிரிந்தது குறித்து நடிகர் நாக சைதன்யா ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே 2021 இல் அறிவித்தனர்.இதனையடுத்து கடந்தாண்டு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்தார்.
இந்நிலையில், நடிகை சமந்தாவை விவாகரத்து செய்தது தொடர்பாக நாக சைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார். அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய நாக சைதன்யா, "நானும் சமந்தாவும் தங்களது சொந்த காரணங்களுக்காக விவாகரத்து முடிவை எடுத்தோம். நாங்கள் ஒருவருக்கொருவரை மதிக்கிறோம். இதற்கு இன்னும் என்ன விளக்கம் தேவை என்று எனக்கு புரியவில்லை. திருமண உறவில் இருந்து பிரிந்து நாங்கள் இருவரும் எங்களது சொந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஏன் என்னை கிரிமினல் போல நடத்துகிறீர்கள்?
Akkineni Naga Chaitanya on divorcing Samantha Ruth Prabhu
— Binge Wire (@BingeWire) February 7, 2025
"I will think 1000 times to break a Relationship."#NagaChaithanya #Samantha#Thandel pic.twitter.com/eGWQpGioFn
நான் 'உடைந்த' குடும்பத்திலிருந்து வந்தவன். எனவே அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன், ஏனென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி நான் நன்றாக அறிவேன். இது இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு" என்று தெரிவித்துள்ளார்.