சமந்தா அழகான மனிதர்... முன்னாள் மனைவி குறித்து மனம் திறந்த நடிகர் நாகசைதன்யா !

naga chaitanya

தனது முன்னாள் மனைவி சமந்தா குறித்து முதல்முறையாக நடிகர் நாகசைதன்யா மனம் திறந்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து சில நட்சத்திர தம்பதியாக வலம் வந்த அவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். தற்போது சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பிறகும் நாகசைதன்யா - சமந்தா குறித்த செய்திகள் இன்றைக்கும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

naga chaitanya

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படத்தில் நடிகர் நாகசைதன்யா நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நாகசைதன்யாவிடம் சமந்தா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

naga chaitanya

அதற்கு பதிலளித்த அவர், விவாகரத்திற்கு பிறகு நாங்கள் இருவருமே மாறிவிட்டோம். சமந்தா ஒரு அழகான மனிதர். விவாகரத்திற்கு முன் நாங்கள் வித்தியாசமான இருந்தோம். நாங்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகளான நிலையில் சட்டப்பூர்வமாகவும் விவாகரத்து பெற்றுவிட்டோம். நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் முன்னேறிவிட்டோம். என் வாழ்க்கையில் அந்தக் கட்டத்தை நான் மதிக்கிறேன். 

ஊடகங்கள் தான் விசித்திரமான செயல்களில் ஈடுபடுகின்றன. அதனால் பொதுமக்களிடையே எங்களது பரஸ்பர மரியாதை இழக்கப்படுகிறது. அதற்கான நான் வருத்தப்படுகிறேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஒரு பாடம். என் வாழ்க்கையை நான் நேர்மறையாக பார்க்கிறேன் என்று கூறினார். 

 

Share this story