நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘உருட்டு உருட்டு’

gajesh

 நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ் ‘உருட்டு உருட்டு’ என்ற காமெடி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ், கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘உருட்டு உருட்டு’. நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு நடித்துள்ளனர். ஜெய் ஸ்டூடியோ கிரியேஷன்ஸ் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு அருணகிரியும் பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணனும் அமைத்துள்ளனர். எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் பாஸ்கர் சதாசிவம்.gajesh

அவர் கூறும்போது, “சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பு, அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற விளம்பரம், பிரபலமாக இருந்தது. பிறகு, ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று அது மாறியது. தற்போது, “குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா? எங்கள் மருத்துவமனைக்கு வாங்க” என்று அனைத்து இடங்களிலும் கருத்தரிப்பு மையங்களை மட்டுமே காண முடிகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். இது காமெடி படம்” என்றார்.

Share this story