‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டிய நடிகர் நானி...!

nani

‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டி நடிகர் நானி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.  இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது.


இந்நிலையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் நடிகர் நானியும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “ எளிமையான, மனதை வருடும், நன்மைகளால் நிறைந்த படங்களே இன்றைய தேவை. அவற்றை கொடுத்துள்ளது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம். இப்படியான அற்புதமான படைப்பை கொடுத்த மொத்த குழுவிற்கும் நன்றி. மிகவும் தேவையான படம் இது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். 

Share this story