கோலாகலமாக நடைபெற்ற நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்

nepoliean

நெப்போலியன் மகன் திருமணத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஜப்பானில் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு கோலகலமாக நடைபெற்றது. இதில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, பாண்டிராஜன், விதார்த், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ், அவரது மனைவி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மெஹந்தி விழாவில் திரையுலகினர் பலரும் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார்கள்.

nepoleon

நெப்போலியன் மகன் தனுஷுக்கு தசைப் பிடிப்பு சம்பந்தமான அரிய வகை பாதிப்பு இருப்பதால் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். அங்கு பல்வேறு நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார். தற்போது தனுஷுக்கும், அக்‌ஷயாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜப்பானில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், எதற்குமே நெப்போலியன் பதிலளிக்கவில்லை.

Share this story