உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் ‘கண்ணப்பா’ படக்குழு சந்திப்பு...!

prabu deva

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை  ‘கண்ணப்பா’ படக்குழுவினர் சந்தித்துள்ளனர். 

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபு தேவா. தற்போது தெலுங்கு படமான ‘கண்ணப்பா’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இருந்தது. ஆனால் வி.எஃப்.எக்ஸ் முடியாதது காரணங்களால் தள்ளி போனது. இந்த நிலையில் ‘கண்ணப்பா’ படக்குழுவினர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து படத்தின் புது ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர். ஜூன் 27ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்த சந்திப்பில் படக்குழுவினருடன் பிரபு தேவாவும் இருந்தார். அவர் யோகி ஆதித்யநாத்துக்கு சால்வை அணிவித்து மகிழ்ந்தார். மேலும் அவரை சந்தித்தது மகிழ்ச்சி எனவும் அவரது விருந்தோம்பலுக்கும் வரவேற்புக்கும் நன்றி என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதை எழுதி மற்றும் திரைக்கதை அமைத்து அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’. ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், மதுபாலா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் புரொமோஷன் போது “கண்ணப்பா படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்” என்று ரகு பாபு பேசியது குறிப்பிடத்தக்கது. 

Share this story