மருத்துவமனையில் நடிகர் பிரபு அனுமதி... பதட்டத்தில் திரையுலகம் !

prabhu

 உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜியின் மகனாக அறிமுகமானவர் நடிகர் பிரபு. அதன் பிறகு பெயர் சொல்லும் பிள்ளையாக மாறி 80-களில் ஹீரோவாக கலக்கினார். 1982-ஆம் ஆண்டு வெளியான 'சங்கிலி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் 'அதிசயபிறவி',  'கோழி கூவுது', 'நீதிபதி', 'ராகங்கள் மாறுவதில்லை' உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார்.‌

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், வாரிசு ஆகிய படங்களில் தனது கதாபாத்திரத்திற்கு பொருந்தும்படி கச்சிதமாக நடித்திருந்தார். இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

prabhu

இதையடுத்து நடிகர் பிரபுவின் உடல்நிலை குறித்து பரபரப்பு அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது‌. அதன்படி நேற்று இரவு சிறுநீரக பிரச்சனை காரணமாக நடிகர் பிரபு அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை மருத்துவர்கள பரிசோதனை செய்ததில் கிட்னியில் கல் அடைப்பு இருப்பது‌ கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை யூரோஸ்கோப்பி லேசர் சிகிச்சை  மூலம் கற்கள் அகற்றப்பட்டது. தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரபு விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

Share this story