வெளியேறிய ‘சித்தார்த்’ – வருத்தம் தெரிவித்த ‘பிரகாஷ் ராஜ்’.

photo

நடிகர் சித்தார்த்தின் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தியது குறித்து ஒரு கன்னடராக மன்னிப்பு கேட்டுள்ளார்  நடிகர் பிரகாஷ் ராஜ்.

photo

சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு பெங்களூரில் நடந்தது. அப்போது காவிரி பிரச்சனையை காரணம் காட்டி அந்நிகழ்ச்சியை கன்னட அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். இந்த விவகாரம் சர்சையை கிளப்பிய நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

photo

அந்த பதிவில் அவர் கூறியதாவது, “ நீண்ட நாட்களாக காவிரி பிரச்சனையை தீர்க்க தவறிய அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் கேள்வி கேட்பதற்கு பதிலாக , மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்பதற்கு பதிலாக, பொது மக்களையும், திரை கலைஞர்களையும் தொந்தரவு செய்வது ஏற்க முடியாது; ஒரு கன்னடராக, கன்னடர்கள் சார்பாக மன்னிக்கவும்” என கூறியுள்ளார்.

Share this story