தனுஷுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்.. 5வது முறையாக கூட்டணி அமைப்பதால் எகிறும் எதிர்ப்பார்ப்பு !

D50

தனுஷின் ‘டி50’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘D50’ படம் மிரட்டலாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இப்படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

D50

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். கடந்த மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுகிறது. 

D50

ஒரே கட்டமாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சமீபத்திய பேட்டி ஒன்றிலும் நடிகர் பிரகாஷ் ராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே தனுஷுடன் ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘வேங்கை’, ‘அசுரன்’, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் 5வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. 

 

Share this story