’சலார் 2’ குறித்த தகவல் பகிர்ந்த நடிகர் ப்ரித்விராஜ்...

’சலார் 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு ப்ரித்விராஜ் பதிலளித்துள்ளார்.
‘சலார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. ஆனால் அப்படத்தின் கதை இன்னும் முடியவில்லை என்பதால் 2-ம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. இதற்கு படக்குழுவினர், இயக்குநர் என பலரும் பதிலளித்து வந்தார்கள்.
தற்போது ‘சலார்’ படத்தில் பிரபாஸ் உடன் நடித்திருந்த ப்ரித்விராஜ், ‘சலார் 2’ எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். அப்படத்தினை முடித்துவிட்டு அனைவரும் இணைந்து ‘சலார் 2’ படத்தில் பணியாற்ற உள்ளோம். பிரசாந்த் நீல், பிரபாஸ் மற்றும் நான் என எங்களுக்கு மட்டுமே ‘சலார்’ படத்தின் முழுக்கதையும் தெரியும்.
சமீபத்தில் பிரபாஸ் வீட்டில் சந்திக்கும் போது ‘சலார் 2’ படத்தினை எப்படி திட்டமிட்டு இருக்கிறார் என்று பிரசாந்த் நீல் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ப்ரித்விராஜ், ஸ்ருதி ஹாசன், பாபி சிம்ஹா, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.