சூரியின் மாமன் படத்திற்கு வாழ்த்து கூறிய நடிகர் ராகவா லாரன்ஸ்...!

soori

சூரியின் 'மாமன்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படக்குழுவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.maman

அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி இருக்கிறது.  இப்படம் நாளை மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படக்குழுவிற்கு  நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள பதிவில், சூரி தம்பி, உங்க ஊரில் நடந்த மாமன் படத்தின் நிகழ்வில் உங்க உணர்ச்சிப்பூர்வமான பேச்சைப் பார்த்தேன், உங்க உணர்ச்சியுடன் இணைய முடிந்தது. இந்தத் துறையில் சாதிக்க விரும்பும் அனைவருக்கும் நீங்க ஒரு உத்வேகம். மாமன் பிளாக்பஸ்டர் ஹிட்டாகப் போகுது. உங்களுக்கும் உங்க முழு குழுவினருக்கும் வாழ்த்துக்கள். என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும், நாளை முதல் எல்லாரும் மாமன் படத்தை திரையரங்குகளில் பாருங்க என பதிவிட்டுள்ளார்.  ராகவா லாரன்ஸ்-ம் சூரியும் காஞ்சனா 3 படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. 

Share this story