அரசியலுக்கு வராததற்கு காரணம் என்ன ?.. உண்மையை உடைத்த நடிகர் ரஜினி !

rajini

அரசியலுக்கு வராததற்கு என்ன காரணம் என்பது குறித்த உண்மையை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, எனக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதால் அதற்காக தீவிரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தேன். 

rajini

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரானாவின் இரண்டாவது அலை வந்தது. இதையடுத்து கொரானாவின் பரவல் படிபடியாக அதிகரித்து வந்தது. அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்ட நிலையில் அந்த முடிவிலிருந்து பின் வாங்க முடியாது. அதனால் மருத்துவரின் உடல் நிலை குறித்து கேட்டார். அப்போது அவர் நீங்கள் பொதுமக்களை சந்திப்பதோ, பிரசாரத்திற்கு செல்வதோ கூடாது என எச்சரித்தார்.   

இதை மீறி சென்றால் 10 அடி தூரம் தள்ளி நிற்கவேண்டும், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மக்களை பார்க்கும் போது எப்படி தள்ளி நிற்பது என யோசித்தேன். அந்த நேரத்தில் கொரானா உச்சத்தில் இருந்த நேரம். இதை வெளியே சொன்னால் அரசியலை கண்டு ரஜினி பயந்துவிட்டார் என்று கூறுவார்கள். யாரிடம் சொல்லவேண்டுமோ, நானே சொல்கிறேன் என்று என் மருத்துவர் கூறினார். அதன்பிறகு தான் நன்கு யோசித்து அரசியலுக்கு வரவில்லை என்று கூறினேன் என ரஜினி தெரிவித்தார்.  

 

Share this story