இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

‘அண்ணாத்த’ படம் என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘அண்ணாத்த‘. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது. டி.இமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது.

இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

இந்த படத்திற்காக ரஜினி, 80 நாட்கள் நடித்திருக்கிறார். அதில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கில் மட்டும் 30 நடித்துள்ளராம். மற்றப்படி திட்டமிட்டப்படி பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் முடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாட்கள் கொல்கத்தாவில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது. இதில் மீனா, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுப்பட உள்ளன. இந்த ஷூட்டிங் கொரானா பரவல் குறைந்த பிறகு நடைபெறும் என கூறப்படுகிறது.

இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

இந்நிலையில் ஷூட்டிங்கின் போது படக்குழுவினரிடம் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினி. அப்போது பேசிய அவர், ‘அண்ணாத்த’ என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். கொரானா நேரத்தில் இந்த படத்தை முடிக்க முடியுமா என்ற கவலை இருந்தது. ஆனால் தற்போது இந்த படத்தை முடித்துவிட்டேன். இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் உடல் ஒத்துழைத்தால் பார்க்கலாம் என ஆதங்கப்பட்டுள்ளார் ரஜினி.

Share this story