இந்திய சினிமாவை பெருமைப்பட வைத்ததற்கு நன்றி - 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினருக்கு வாழ்த்து !!

rrr

இந்திய சினிமாவை பெருமைப்பட வைத்த ராஜமெளலி மற்றும் கீரவாணிக்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். 

ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இப்படம் பலமொழிகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து. ஹாலிவுட் படத்திற்கு இணையான காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றன. அதனால் இந்த படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

rajini

இந்த வெற்றியை அடுத்து சமீபத்தில் ரஷ்ய மொழியிலும் இப்படம் வெளியானது. இதையடுத்து ஆஸ்கர் ரேஸில் பங்கேற்றது‌. இதைத்தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுக்கு பிறமொழி பிரிவில் போட்டியிட்டது. மொத்தம் 5 மொழிகள் பங்கேற்ற நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் விருதை தட்டிச் சென்றது.‌ இந்த பாடலுக்கு விருது கிடைத்ததற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

rajini

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சினிமாவை பெருமையடைய செய்த கீரவாணி மற்றும் ராஜமெளலி ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார். 

Share this story