கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் மாஸ் நடிகர்.. செம்ம அப்டேட்

rajini

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்து வந்த ரஜினிகாந்த், சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பு பணியில் உள்ள அந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

rajini

இந்த படத்தையடுத்து ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான டிஜே ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். 

rajini

‘ஜெய் பீம்’ படம் போன்று இந்த படமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறது. இந்த படத்தில் என்கவுண்டருக்கு எதிராக போராடும் முன்னாள் காவல்துறை அதிகாரியாக, முஸ்லீம் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.  இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். ஏற்கனவே கமலின் ‘விக்ரம்’ படத்தில் ரோலெக்ஸ் என்ற மிரட்டலான சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story