நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வைர, தங்க நகைகள் கொள்ளை.. போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி !

rajini

 நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் பல மதிப்புள்ள வைர மற்றும் தங்க நகைகள் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது மனைவி லதாவுடன் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, தேனாம்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தற்போது ‘லால்சலாம்’ படத்தை இயக்கிய வரும் அவர், தனது வீட்டில் கொள்ளை போயுள்ளதாக புகார் ஒன்று போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

rajini

அந்த புகாரில் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயுள்ளது.‌அதில் வைர செட், பழங்கால நகைகள், நவரத்தினங்கள், காதணிகள், ஆரம், சுமார் 60 சவரன் நகைகள் இருந்தன. எனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த நகைகளை கடந்த ஏப்ரல் மாதம் தான் போயஸ் கார்டன் வீட்டிற்கு மாற்றினேன். இந்த லாக்கரின் சாவிகள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தன.

rajini

எனது அடுக்குமாடி வீட்டில் இருக்கும் சாவி இருப்பிடம் வீட்டில் வேலைப் பார்க்கும் ஊழியர்களுக்கும் தெரியும். அவர்கள் அடிக்கடி அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று வருவார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி நகைகளை சரி பார்த்தபோது அங்கு மேற்குறிப்பிட்ட நகைகள் எதுவும் இல்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நகைகளை வீட்டில் பணியாற்றுபவர்கள் கொள்ளையடித்தார்களா அல்லது வெளி நபர்கள் கொள்ளையடித்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ரஜினி வீட்டில் கொள்ளை போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story