ஹாயாக விமானத்தில் சென்ற ரஜினிகாந்த்... எங்கு சென்றார் தெரியுமா ?

rajini

நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் மாலத்தீவு சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. 

rajini

 தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்ற வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கிரிக்கெட் கதைகளம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 

தற்போது சிறிய இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் சென்றுள்ள புகைப்படங்களை அந்நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பயணம் எதற்காக என்பது குறித்து ரஜினிகாந்த் தரப்பில் வெளியிட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story