கவலைப்படாதீங்க... படம் ஹிட்டாகும்... இமயமலையில் ரஜினி பேசிய வீடியோ வைரல் !

jailer

'ஜெயிலர்' குறித்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.‌ நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், மோகன் லால், தமன்னா, வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Jailer

இந்த படம் வெளியாவதற்கு முன்பு இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார் நடிகர் ரஜினிகாந்த். அங்கு ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்ற ரஜினிகாந்த், மாணவர்களிடையே பேசினார். அப்போது 'ஜெயிலர்' குறித்து பேசிய அவர், கடவுள் அருளால் ஜெயிலர் ரிலீசாகுது. படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. பயங்கர எதிர்பார்ப்பு, டென்ஷனில் இருந்த நிலையில் சென்னையில் இருந்து இமயமலை புறப்பட்டேன்.

Jailer

இதையடுத்து நேராக தயானந்த சரஸ்வதி ஆசிரமம் வந்து, சுவாமிகளிடம் ஆசி வாங்கினேன். அதன்பிறகு எனக்கிருந்த டென்ஷன் குறைந்தது. என் டென்ஷனை அவரிடம் இறக்கி வைத்துவிட்டேன். இப்போது எந்த டென்ஷனும் எனக்கு இல்லை. எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கவலைப்படாதீங்க.. ஜெயிலர் படம் ஹிட்டாகும் என காலையிலேயே சுவாமிஜி சொன்னார். அதனால் படம் மிகப்பெரிய ஹிட்தான் என்று கூறினார் ‌. 

 ‌‌‌‌‌‌‌‌‌‌

Share this story