கபில் தேவ்வுடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெருமை - நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி !

கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெருமை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். அதாவது மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது கேரக்டர் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மும்பை சென்றார். தற்போது ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பை படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் இணைந்து பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வுடன் பணியாற்றி வருகிறார். அதாவது கிரிக்கெட் குறித்த பயிற்சிகளை ரஜினிக்கு கபில் தேவ் அளித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவிற்கு முதல்முறையாக உலக கோப்பை வென்று பெருமைப்படுத்தியவர் கபில் தேவ். மிகவும் மரியாதைக்குரிய, அற்புதமான மனிதரான அவருடன் இணைந்து பணியாற்றுவது பெருமையான விஷயம் என்று கூறியுள்ளார்.
It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!#lalsalaam#therealkapildev pic.twitter.com/OUvUtQXjoQ
— Rajinikanth (@rajinikanth) May 18, 2023