யோகியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நடிகர் ரஜினிகாந்த்... வைரல் வீடியோ !

rajinikanth

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வரும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான நிலையில் அதற்கு முன்னரே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். 

rajinikanth

அங்கு பாபாஜி குகை உள்ளிட்ட முக்கிய ஆன்மீக இடங்களுக்கு சென்று வழிப்பட்டார். இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். அதன்பிறகு அங்குள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்ற அவர், உத்தரப்பிரதேசம் சென்று ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து பேசினார். 

பின்னர் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியாவுடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை பார்த்தார். இந்நிலையில் உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது யோகியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


 

 

Share this story