ஏவிஎம் சரவணனை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்... உடல் நலம் குறித்து நலம் விசாரித்தார் !

rajini

பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.  ‌ 

தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறவனமாக இருக்கிறது ஏவிஎம். சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள அந்த நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வருகிறது. 

rajini

இ‌ந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த தமிழக முதல்வர் தமிழக மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஏவிஎம் சரவணை பார்த்து நலம் விசாரித்தார். இதையடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்த், ஏவிஎம் சரவணனை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் போது முன்னணி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உடனிருந்தார். இது குறித்து புகைப்படத்தை ஏவிஎம் சரவணனின் பேத்தி அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் 'லால் சலாம்' ‌‌‌‌‌‌‌‌படத்தில் நடிக்க மும்பை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story