முன்னாள் முதல்வரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்... திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன ?

rajini

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்து பேசியுள்ளார். 

 இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகை தாண்டி அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் ஆகியோருடன் நட்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் தன்னுடைய நீண்ட கால நண்பரான முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். 

rajini

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஒருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதோடு அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்தும்,  ஜெயிலர் படத்தின் பணிகள் குறித்தும் சந்திரபாபு நாயுடு ரஜினியிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

rajini

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, அன்பு நண்பர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது ஐதராபாத்தில் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் மரியாதை நிமித்தமாக இவர்கள் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story