சூப்பர் ஸ்டாரின் அடுத்த இயக்குனர் இவரா ?... திக்குமுக்காடும் ரசிகர்கள் !

rajini

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் வேகமாக அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு நிறைவுபெற உள்ளது. 

இந்த படத்தை அடுத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ரஜினியை இயக்கும் இயக்குனர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. முதலில் ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாகவும் கூறப்பட்டது. 

rajini

ஆனால் சிபி சக்ரவர்த்தியின் கதையில் ரஜினிக்கு திருப்தியில்லை என்பதால் ‘லவ் டுடே’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் தான் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் என்றும், லைக்கா தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் டிஜே ஞானவேல். இருளர் பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்து பேசிய இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.  உலக அளவில் பல சர்வதேச விருதுகளை இப்படம் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story