‘ஆண்டவன் இருக்கான்’-‘கூலி’ இசை வெளியீட்டு விழாவிற்கு கிளம்பும் முன் ரஜினிகாந்த் பேட்டி

ரஜினி

'கூலி' பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த்தை கண்டதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர். ரசிகர்கள் மத்தியில் ரஜினி கைகளை அசைத்து உற்சாகமடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கூலி படம் மீது ரசிகர்களிடம் உள்ள எதிர்பார்ப்பு எனக்கும் உள்ளது. அதே எனர்ஜியோடு நானும் இருக்கிறேன். ஆண்டவன் இருக்கான்” எனக் கூறி சென்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. கூலி திரைப்படம் உலகளவில் 5000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள "கூலி" திரைப்படத்திற்கு "A" தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது. படம் 2 மணி 48 நிமிடம் ஓடும் எனவும் தெரியவந்துள்ளது

Share this story