நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான வெற்றிப் படம் - ரஜினிகாந்த் வாழ்த்து

Rajini and sasikumar

அயோத்தி திரைப்படம் தொடர்பாக நடிகர் சசிகுமார் மற்றும் படக்குழுவினரை நடிகர் ரஜிகாந்த் பாராட்டியுள்ளார். 

சசிகுமார் நடிப்பில் உருவான அயோத்தி திரைப்படம் அன்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  மதப்பிரச்சினைகளை பேசும் படமாக 'அயோத்தி' உருவாகியுள்ளது. இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது. இதனிடையே இந்த படத்தை பார்த்த பலரும் நடிகர் மற்றும் இயக்குநரை பாராட்டி வருகின்றனர். 


இந்த நிலையில், அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த, அந்த படத்தில் நடத்த சசிகுமார், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!. இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதனிடையே ரஜினிகாந்தின் பாராட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகுமார், நடிகர் என கூறாமல் நண்பர் என கூறியதே எனக்கு மிகப்பெரிய பெருமை என கூறியுள்ளார். 
 

Share this story