அதே ஸ்டைல்.. அதே லுக்.. வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள் !

rajini

நடிகர் ரஜினிகாந்தின் தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

 நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பல மொழி நடிகர்கள் நடித்து வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Jailer

இந்த படத்தை முடித்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால்சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது இளைய மகள் செளந்தர்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இளமை தோற்றத்தில் அதே ஸ்டைல், அதே லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Jailer

பிரபல தொழிலதிபரான மகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, கலாச்சார மையம் ஒன்றை தொடங்கியுள்ளார். மும்பையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்த மையத்தின் தொடக்கவிழாவிற்காக சென்னையில் இருந்து மும்பைக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story